இமாலய பனிப்பாறைகள் மிக வேகமான இரட்டிப்பு மடங்கு உருகி வருவதாக அதிர்ச்சி தகவல்!

இமாலய பனிப்பாறைகள் மிக வேகமான, அதாவது இந்த நூற்றாண்டில் இரட்டிப்பு மடங்கு உருகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இமாலய சிகரம் மட்டுமில்லாது உலகிலுள்ள மற்ற ஒன்பது மலைத்தொடர்களில் அடர்த்தி குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு எரிக்கப்படுவதால் ஏற்படும் உலகளாவிய வெப்பநிலை எவ்வளவு விரைவாக உயர்கிறது, என்பதை நிறுவ விஞ்ஞானிகள் நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றனர்.

ஒரு புதிய ஆய்வில், 40 ஆண்டுகால செயற்கைக்கோள் கண்காணிப்பில் இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் முழுவதும் ,2000 முதல் பனிப்பாறைகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு செங்குத்து Foot மற்றும் அரை சமமான அளவிற்கு பனிகள் உருகி வருவதைக் காட்டியுள்ளது. இது 1975 மற்றும் 2000 க்கு இடையில் இரு மடங்கு வீதத்தைக் குறிக்கிறது.

1980 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சுமார் 30 சென்டிமீட்டர் வரை உருகும் பனிச்சிகரங்கள், 2006 ஆம் ஆண்டு கணக்கின்படி 1.5 மீட்டர் வரை உருகி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், 1980 ஆம் ஆண்டு முதல் உருக தொடங்கிய பனிச்சிகரங்களில் தண்ணீர் சதவிகிதம் 10.5 மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில் வானிலை வழக்கத்திற்கு மாறாக மாறுவதற்கு இதுவே முக்கிய காரணம், என்று உலக பனிப்பாறைகள் கண்காணிப்பு சேவை அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.