COVID -19: சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வந்த இந்திய ஊழியர்..!

COVID-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டுவர, அரசாங்கத்தின் சிறப்பான பராமரிப்புச் சேவையும் மருத்துவ ஊழியர்கள் கொடுத்த ஊக்கமும் உதவியதாக வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

வெஸ்ட்லைட் தே குவான் (westlite toh guan) தாங்கும் விடுதியில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் இந்தியரான கருணாநிதி ராஜாவும் ஒருவர். கடந்த மார்ச் மாத இறுதியில் இவருக்கு கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் பூங்காவில் ரோபோ நாய் – காணொளி..!

தொண்டை அரிப்பு, உடல்வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் ராஜா மருத்துவரை நாடினார். ஆம்புலன்ஸ் மூலம் அவரை விடுதியிலிருந்து Novena மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள்.

மார்ச் 25 நள்ளிரவில் ராஜாவிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் 26ம் தேதி அவருக்கு கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டதாகவும் ராஜா தெரிவித்துள்ளார்.

அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பாசிர் ரிஸில் தனிமைப்படுத்தும் விடுதியில் தனிமை படுத்துவதற்காக இடம் மாற்றப்பட்டார்.

கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதும் மிகவும் மன உளைச்சலாக இருந்ததாகவும், அவருடைய சகோதரர்கள், அலுவலக நண்பர்கள் மற்றும் அலுவலக மேலாளர் அனைவரும் ஆறுதல் கூறி உறுதுணையாக இருந்ததாகவும் ராஜா கூறினார்.

அரசாங்கத்தின் சிறப்பான பராமரிப்புச் சேவையும், மருத்துவமனை ஊழியர்களும் நன்றாக கவனித்துக்கொண்டதாக ராஜா கூறியுள்ளார். தற்போது வெஸ்ட்லைட் தே குவான் (westlite toh guan) தங்கும் விடுதிக்கு மாற்றப்பட்ட ராஜா அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், சுகாதார அமைச்சு (MOH) அவரது உடல்நலனை தொடர்ந்து கவனித்து வருகின்றது.

Source : Seithi Mediacorp

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 753 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!