சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சோதனை; தங்கம் பறிமுதல்..!

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சோதனை நடத்தியதில், இந்திய மதிப்பில் 17 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : COVID-19: இந்தியாவில் அதிகரிக்கும் சம்பவங்கள் – மொத்தம் 31ஆக உயர்வு..!

இந்த சோதனையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த அருண் பிரசாத் (வயது 24) என்பவரிடம் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் அவர், காற்று அடிக்கும் கருவிக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த, இந்திய மதிப்பில் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 398 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : Dailythanthi

இதையும் படிங்க : கொரோனா பாதிப்பு: ‘இந்தியர்களை போல் வணக்கம் சொல்லுங்கள்’ – இஸ்ரேல் பிரதமர்

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil