சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சோதனை; தங்கம் பறிமுதல்..!

மருத்துவர்கள் செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை 25% - இண்டிகோ

சிங்கப்பூரில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கக் நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து, ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானம் நேற்று காலை, 7:25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 விமானங்கள் சென்னை செல்லவில்லை; மொத்தம் 28 விமானங்கள் ரத்து..!

அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கோவையைச் சேர்ந்த செல்வி (35) என்பவரை சோதனையிட்ட போது, அவரது கைப்பைக்குள் இருந்து, 350 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் இந்திய மதிப்பு, சுமார் 15.65 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்; வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது..!

Source : Dinamalar

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil