உலக பண்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த Google CEO சுந்தர் பிச்சை.!

தமிழகத்தை சேர்ந்த Google CEO சுந்தர் பிச்சை மற்றும் Nasdag தலைவர் அடெனா பிரைட்மேன் ஆகியோர் உலக பண்பாளர் விருதுக்கு ( Gloabal Leadership Award) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 30 பிரிவின் கீழ் வருடா வருடம் வாஷிங்டன் நிறுவனமான US-Indian Business Council இந்த விருதை வழங்கி வருகிறது.

உலக அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக முயற்சிகளை மேற்கொண்ட தலைமைகளுக்கும், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வணிக ரீதியான தொடர்பை நீட்டிப்பவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்த வரை சுந்தர் பிச்சை Digital Economy -ஐ மட்டுமல்லாமல், பெரும்பாலான இந்தியர்கள் தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கு பல முயற்சிகள் எடுத்துவருவது சிறப்பானது, என US-Indian Business Council-ன் தலைவர் நிஷா பிஸ்வால் அவர்கள் பெருமிதம் அடைவதாக கூறினார்.

அதனுடன் இந்தியா மட்டுமல்லாது, 50 நாடுகளின் பங்குச்சந்தை வர்த்தகத்தை Nasdag தலைவர் அடெனா ஃப்ரைட்மேன் உயர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான உலக தலைமை பண்பாளர் விருதிற்கு தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அடெனா ஃப்ரைட்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து வருவதாக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.