முப்படைகளுக்கும் தளபதியான பிபின் ராவத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bipin Rawat Defence Staff
Bipin Rawat Defence Staff

Bipin Rawat: முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதையடுத்து, முப்படை தலைமை தளபதியின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வகுப்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

முப்படை தலைமை தளபதி பதவி உருவாக்க மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த 24ம் தேதி இந்த பதவியை மத்திய அரசு முறைப்படி அமைத்தது. அதன் பொறுப்புகளையும் அறிவித்தது. இப்பதவியில் அமரப்போகும் முதலாவது நபர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வந்தது.

இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை – சுவர் விபத்தில் பலியான உறவினர்கள் உறுதி

இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதியாக நேற்று நியமிக்கப்பட்டார். அவர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ராணுவ தளபதியாக பதவியேற்ற நிலையில், அவரது 3 ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த சூழ்நிலையில், முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

65 வயது வரை இப்பதவியை வகிக்க மத்திய அரசு, சட்டத்திருத்தம் செய்துள்ளது. எனவே, 65 வயது வரை பிபின் ராவத், இந்த பதவியை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராக அவர் செயல்படுவார். ராணுவம் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசுக்கு ஆலோசனை சொல்லும் ஒரே நபராக இருப்பார்.

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு இடையே சிறப்பான நல்லிணக்கம் நிலவச்செய்வதில் அவர் கவனம் செலுத்துவார். நான்கு நட்சத்திரங்கள் கொண்டவராக இருப்பார்.

ராணுவ தளபதி பதவியில் இருந்து இன்று ஓய்வு பெற்றவுடன், முப்படை தலைமை தளபதி பதவியில் பிபின் ராவத் தொடருவார். அவரைத் தொடர்ந்து, தற்போதைய ராணுவ துணைத்தளபதி மனோஜ் முகுந்த் நாராவனே, புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்பார்.

மேலும் படிக்க – மெல்ல மெல்ல மீண்டுவரும் தமிழகத்தின் குட்டி சிங்கப்பூர்…!