ஏமாற்று விளம்பரங்களுக்கு 5 ஆண்டு சிறை – புதிய சட்ட திருத்தம்

fraud advertisement 5 years jail new act

கிரீம்கள் மூலம் தோலை வெள்ளையாக்குவதாக விளம்பரம் செய்தால் இனி 5 ஆண்டுகள் சிறை, 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது.

மருந்துகள் மற்றும் மாய நிவாரணங்கள் தொடர்பாக, ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை தடை செய்யும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

மாநில அரசுகள் ஒத்துழைத்தால், பெட்ரோல் டீசல் விலை GST-க்குள் கொண்டுவரப்படும் – நிதி அமைச்சர்

இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

78 வகையான நோய்கள், குறைபாடுகளை சரிசெய்வதாகக் கூறி மருந்துகள், நிவாரணங்கள் மற்றும் தயாரிப்புகளை விளம்பரம் செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது.

இந்த தடைப் பட்டியலில் தோலை வெள்ளையாக்குவது, பாலுறவு திறனை அதிகரிப்பது, திக்குவாய் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மையை குணப்படுத்துவது, முடியை பழுப்புநிறமாக மாற்றுவது தொடர்பான விளம்பரங்களும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இத்தகைய விளம்பரங்களை செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வரவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதன் முதலாக ஒரு நல்லது செய்த கொரோனா வைரஸ் – கற்பை காப்பாற்றிக் கொண்ட பெண்