திருச்சியில் இருந்து அபுதாபி, தோகாவுக்கு வாரத்தில் 4 நாட்கள் விமான சேவை!

Trichy airport

திருச்சியில் இருந்து 3 புதிய வழித் தடங்களில் விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் கப்பலில் இரு இந்தியர்களுக்கு கொரோனா உறுதி – பரபரக்கும் இந்திய தூதரகம்

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்ச் 28 ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து அபுதாபி மற்றும் தோகாவுக்கு வாரத்தில் 4 நாட்கள் நேரடி விமான சேவை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

மதுரையில் இருந்து டெல்லிக்கு தினமும் இயக்கப்படும் 4 விமானங்களில் ஒன்று திருச்சியில் இருந்து புறப்படும் என்றும் சியாம் சுந்தர் கூறியுள்ளார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 40 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நற்செய்தி – சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையம்