இந்த ஆண்டிற்கான “போர்ப்ஸ் டாப் 100” பிரபலங்கள் பட்டியல் வெளியீடு..!

Forbes-2019 top celebrity list

போர்ப்ஸ் நிறுவனம் இந்த 2019ம் வருடத்திற்கான சிறந்த 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் அவர்களின் புகழ் அளவை மையமாக வைத்து இந்த தரவரிசையை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது

இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் “விராட் கோலி” உள்ளார். இவர் 2019ம் ஆண்டில் 252 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது இடத்தில் அக்‌ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் “தல தோனி” உள்ளார்.

இந்நிலையில், இந்த பட்டியலில் மொத்தம் 9 தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள்:

  • ரஜினிகாந்த்- 13
  • ஏ.ஆர். ரகுமான்- 16
  • விஜய் – 47
  • அஜித் – 52
  • இயக்குனர் ஷங்கர்- 55
  • கமல்ஹாசன்- 56
  • தனுஷ்- 64
  • இயக்குனர் சிவா- 80
  • கார்த்திக் சுப்புராஜ்- 84