கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பெரிய அளவில் பொருளாதார முடக்கத்தை தற்போது சந்தித்து வருகின்றது . இந்நிலையில் அதிரடி நடவடிக்கையாக மத்திய அரசு நேற்று 05.05.2020 செவ்வாய் கிழமை கிழமை அன்று இதுவரை கண்டிராத அளவில் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு கலால் வரியை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் இந்த கலால் வரி உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் விதிக்கப்பட்டிருக்கும் கலால் வரியின் மூலம் அரசுக்கு கூடுதலாக 1.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக பெட்ரோலிய துறையை சேர்ந்த அதிகாரிகள் பேசியபோது. இந்த வரி உயர்வால் டீசல் மற்றும் பெட்ரோலில் சில்லறை விற்பனையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும். மாறாக கச்சா எண்ணெய் விலை குறைப்பில் அதனை சமன் செய்யலாம் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளாவில் அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் தமிழகத்திலும் TASMAC கடைகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.