இனி சென்னைக்குள் விமானம் வழியாக வரும் அனைவருக்கும் இ-பாஸ், தனிமைப்படுத்துதல் கட்டாயம்

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு இ-பாஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என்றாலும், வந்திறங்கும் போது, வைரஸ் அறிகுறியில்லாமல் காணப்பட்டாலும் கூட, இனி அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.

சென்னைக்கும் நுழைய விரும்பும் அனைத்து விமான பயணிகளும் தமிழ்நாடு இ-பாஸுக்கு //tnepass.tnega.org/#/user/pass தளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் “எடுத்துக்காட்டாக, கடலூர் அல்லது திருச்சி செல்ல விரும்புவோர், சென்னையில் இறங்கிய பிறகு, அவர்கள் தங்களது இ-பாஸ் விண்ணப்பத்தில் இறுதி இலக்கைக் குறிப்பிட வேண்டும்.” என்று அவர் கூறினார்.

இருந்தாலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒருவர் இ-பாஸ் எடுக்காவிட்டாலும், அவர்கள் விமான நிலையத்தில் பயணிகள் வருகை அறைக்கு அருகில் தமிழக அரசு அமைத்துள்ள கவுண்டர்களில் இ-பாஸ் பெறலாம். “அப்போதுதான் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். இ-பாஸ் ஒவ்வொருவரிடமும் தீவிரமாக சோதிக்கப்படும்” என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

வந்தே பாரத் மிஷன் விமானங்கள் மூலம் சென்னைக்கு வரும் விமானப் பயணிகள் கட்டாய வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் institutional quarantineல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். Institutional quarantine என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச வசதி அல்லது நகரத்தில் உள்ள ஏதாவது ஒரு ஹோட்டலில், பயணிகளே அவர்களது சொந்த செலவில் தனிமைப்படுத்திக் கொள்ளுதலாகும்.