‘எமிரேட்ஸ்’ விமான பயணிகளுக்கு உலக முந்திரி தின பரிசு..!

Emirates treats fliers with Indian cashew nuts

உலக முந்திரி தினத்தை முன்னிட்டு ‘எமிரேட்ஸ்’ விமானங்களில் பயணிகளுக்கு இந்திய முந்திரியினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டது.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் உலக முந்திரி தினத்தை (நவம்பர் 23) வித்தியாசமான முறையில் கொண்டாடியது.

துபாய் எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ”சர்வதேச மற்றும் பிராந்திய விமானங்களில் எங்கள் விருந்தினர்களுக்கு சுவையான மற்றும் வறுத்த இந்திய முந்திரிப் பருப்பை ஒரு சிற்றுண்டியாகவும், பல்வேறு முந்திரி உணவுவகைகளாகவும் வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

அதேநேரம் அதன் ஏற்றுமதிகளில் ஐக்கிய அரபு அமீரக (UAE) நாடு மட்டுமே 21 சதவீத முந்திரிகளை இறக்குமதி செய்கிறது. அதாவது ஓராண்டில் 80,000 டன் முந்திரிகளை இந்தியாவிலிருந்து நாங்கள் இறக்குமதி செய்கிறோம். இதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் 900 மில்லியன் என்றும் தெரிவித்துள்ளது.

முதல்வகுப்பு பயணிகளுக்கும், பிஸினெஸ் கிளாஸ் பயணிகளுக்கும் தமிழ்நாட்டின் முந்திரிகளில் தயாரிக்கப்பட்ட வறுத்த இந்திய மசாலா முந்திரி உணவுகள் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும், எமிரேட்ஸ் விமான நிறுவனம் எங்கள் உலகளாவிய விமானப் பயணிகளுக்கென அதன் எண்ணற்ற பிராந்திய மற்றும் சர்வதேச சுவையான உணவுகளில் சுமார் 33 டன் மசாலா முந்திரிகளை 125 டன் பாதாமுடன் பிஸ்தாக்கள் மற்றும் மக்காடமியா சேர்த்து வழங்கி வருகிறோம்.

மேலும், இதற்கென எங்கள் எமிரேட்ஸ் நிறுவனம் 13,707 இந்தியர்களை வேலைக்கு வைத்துள்ளது, இவர்கள் எங்கள் பணியாளர்களில் 21 சதவிகிதம் ஆவர். இவர்கள் உலகெங்கிலும் 86 நாடுகளில் 159 இடங்களுக்குப் பறக்கின்றனர், என்று எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது

விரைவான விமான சேவையை வழங்கும் எமிரேட்ஸின் சரக்குப் பிரிவான எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கொச்சியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு 50,000 கிலோவுக்கு மேற்பட்ட முந்திரி கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.