டெல்லி மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் துணைப் பிரதமர் மரியாதை செலுத்தினார்!

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் தினத்தை போற்றும் வகையில் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீயட் மற்றும் MOS ஜாக்கி மொஹமட் ஆகியோர், மகாத்மா காந்தியின் நினைவுச்சின்னம் அமைந்துள்ள டெல்லி ராஜ்காட்டில் மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இருவரும் இந்திய மற்றும் சிங்கப்பூர் வணிகத் தலைவர்களை சந்தித்து பேசினர். புதுடில்லியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சிங்கப்பூரர்களையும் சந்தித்து பேசினர்.

கூடுதலாக, சிங்கப்பூர் கலைஞர்களின் தெருக் கலைகளைக் கொண்ட லோதி காலனியையும் இருவரும் பார்வையிட்டனர்.

இறுதியில், இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள புதுதில்லியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப்படங்கள்: