டெல்லியில் வரலாறு காணாத கடுமையான குளிர்; பொதுமக்கள் கடும் அவதி..!

Delhi Records Season's Coldest Day, Temperature Drops To 4.2 degrees

இந்திய தலைநகர் டெல்லியின் மாதாந்திர அதிகபட்ச வெப்பநிலை 1901ஆம் ஆண்டுக்குப் பின் மிகவும் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இன்று வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்துள்ளது.

அங்கு நிலவும் கடுமையாயின குளிரின் உச்ச நிலையாக நேற்று வியாழக்கிழமை, 13.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்பட்டது. மேலும், இது சராசரி வெப்பநிலைவிட 7 டிகிரி செல்சியஸ் குறைவு என்று தெரிவித்துள்ளது.

கடந்த 1901ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 17.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் இது 19 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “டெல்லியில் டிசம்பர் மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை 19.5 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.”

மேலும், “தற்போது டெல்லியில் நிலவி வரும் உறை குளிர் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும். வரும் புத்தாண்டுக்குக்கு முதல்நாள் மாலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும். கூடுதலாக, ஜனவரி வரை குளிரும் ஈரப்பதமும் இருக்க வாய்ப்புள்ளது.” என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

டெல்லியில் பல்வேறு இடங்களில் பனி மூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.