நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச் சூடு – அதிர்ச்சி காணொளி..!

Dancer shot in face at UP wedding, two arrested
Dancer shot in face at UP wedding, two arrested

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் சிக்ரகூட் என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 22 வயதான ஹீனா எனும் பெண் நடனக் கலைஞரின் முகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கடந்த நவம்பர் 30ம் தேதி, அந்த கிராமத்தின் தலைவர் சுஹிர் சிங் படேல் என்பவரின் மகள் திருமண நிகழ்ச்சியில் ஹீனா நடனமாடிக் கொண்டிருக்கும் போது அரங்கேறியுள்ளது. திடீரென இரண்டு முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில், இரண்டாவது குண்டு ஹீனாவின் தாடையில் பாய்ந்தது.

அந்த காணொளி உரையாடலில் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஒருவர், “இந்த பாடல் ஒலிக்கப்பட்டால் சுடுவேன்” என்று கூறுவது அந்த பதிவாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவில், ஹீனா துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுவதும் பதிவாகியுள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட ஹீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.