ஃபனி புயல் அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்பு- இந்திய வானிலை மையம் தகவல்…

ஃபனி புயல் அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் ஒடிசாவில் கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் தென் ஆந்திர கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் ஃபனி புயல் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரம் அடைந்து செவ்வாய்கிழமை நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் முன்னறிவிப்பு செய்துள்ளது.

இன்றைய நிலவரப்படி ஃபனி புயல் சென்னையிலிருந்து 1050 கிலோமீட்டர் தொலைவிலும் மச்சிலிபட்டினத்திலிருந்து 1230 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடமேற்கு திசை நோக்கி ஃபனி புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகும், ஏப்ரல் 30 முதல் அது வடகிழக்கு திசை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த புயல் காரணமாக வட தமிழக கடற்கரைப் பகுதியிலும் ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இலேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னறிவிப்பு செய்துள்ளது.