சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை; பயணிகள் உறுதிமொழி ஏற்பு..!

சிங்கப்பூரில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் மதுரைக்கு வந்த விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 166 பயணிகள் பயணித்து வந்தனர்.

பின்னர், சுகாதார நடவடிக்கையாக, அவர்களில் யாரேனும் இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, சீனா மற்றும் சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்திருக்கிறார்களா? என்பது குறித்து முதலில் சோதனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் விமானம் உட்பட சென்னையில் ஒரே நாளில் 118 விமானங்கள் ரத்து..!

ஆனால், அந்த சோதனையில் அவர்கள் வைரஸ் கடுமையாக தாக்கிய எந்த நாடுகளுக்கும் சென்றுவிட்டு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்த பரிசோதனை நடைபெற்றது. இதனை சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்த பரிசோதனை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது, யாருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக தெரியவில்லை என்றும் தமிழக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், அவர்களுக்கு சுய சுத்தம் பேணுதல், வீட்டிற்கு சென்ற பின்னர் தங்களை எவ்வாறு தனிமைப்படுத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்புகள் அங்கேயே நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரிடமும் சுய உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : ஒரே ஒரு பயணியுடன் சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்ற டைகர் ஏர்வேஸ் விமானம்..!

corona virus. Corona virus tamil news, Corona virus news in tamil, corona virus tamil nadu news, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms