தமிழகத்தில் COVID-19 பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் குணமடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இன்று (மார்ச் 24) புதிதாக மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 74 வயது முதியவர் (போரூர்), 52 வயது பெண் (புரசைவாக்கம்), 25 வயது பெண் (கீழ்கட்டளை) ஆகியோர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
#coronaupdate:Chennai reports 3 new cases for #COVID19. All 3 travelled abroad.74 Y M return from USA at #Stanley,52 Y F return from USA at #Stanley,25 Y F return from Swiss at #KMC,.They are residents of Porur, Purasaivakkam, Keelkattalai rsptvly.Pts in isolation & stable. #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
அந்த 15 பேரில், 9 பேரின் விவரம் வெளியாகி உள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
முதல் நபர்
- 45 வயது காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 28-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் ஓமனில் இருந்து சென்னை வந்துள்ளார்.
- 7-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
இரண்டாம் நபர்
- 25 வயது உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 13-3-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்.
- 18-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
மூன்றாம் நபர்
- 21 வயது சென்னையை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 17-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் அயர்லாந்தில் இருந்து சென்னை வந்துள்ளார்.
- 20-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நான்காம் நபர்
- 65 வயது சென்னை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 15-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் நியூசிலாந்து to சிங்கப்பூர் வழியாக சென்னை வந்துள்ளார்.
- 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஐந்தாம் நபர்
- 69 வயது ஈரோட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 11-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்துள்ளார்.
- 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஆறாம் நபர்
- 75 வயது ஈரோட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 11-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்துள்ளார்.
- 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஏழாம் நபர்
- 25 வயது கோயம்புத்தூர் சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 15-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- ஸ்பெயினில் இருந்து டெல்லி சென்று அங்கு இருந்து பெங்களூர், அங்கு இருந்து கோவை வந்தார்.
- 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
எட்டாம் நபர்
- 43 வயது திருநெல்வேலி சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 20-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் துபாயில் இருந்து மதுரை வந்துள்ளார்.
- 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஒன்பதாம் நபர்
- 64 வயது சென்னை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 20-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
- அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கு இருந்து சென்னை வந்தார்.
- 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
தகவல் : தமிழக ஊடகங்கள்