தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு COVID-19 தொற்று; எண்ணிக்கை 50 ஆக உயர்வு..!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு இந்த COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.