சென்னையில் 2வது புதிய விமான நிலையம்.!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டம், அதற்கான ஆறு இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டே இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான். இதை கணக்கில் கொண்டு இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் பயணிகள் வரத்து கணிசமாக அதிகரிக்கக்கூடும், என்ற தொலைநோக்கு பார்வையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த புதிய விமான நிலையம் அமைக்க சுமார் 2000 திற்கும் அதிகமான ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது, என்று விமான நிலைய உயர் அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையம் அமைக்க சென்னை அருகில் உள்ள தொடூர், வளத்தூர், திருப்போரூர், செய்யூர், மதுரமங்கலம் மற்றும் மப்பேடு ஆகிய பகுதிகள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.