கம்போடியாவில் ராஜேந்திர சோழனின் சிலையை கட்டவும், திருக்குறளை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கவும் திட்டம்!

கம்போடியாவில் ராஜேந்திர சோழனின் சிலையை கட்டவும் மற்றும் திருக்குறளை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கம்போடியா கலாச்சார அமைச்சகம் மற்றும் நுண்கலை அமைச்சகத்துடன் அங்கோர் தமிழம் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் ஆகியோர் இணைந்து சோழ பேரரசர் ராஜேந்திர சோழர் மற்றும் கெமர் பேரரசர் சூர்யவர்மன்(I) ஆகியோரின் சிலைகளை சீம் ரீப்பில் (Siem Reap) உள்ள கம்போடியா நகரத்தில், இந்த இரண்டு பெரிய மன்னர்களின் நட்பை நினைவுகூரும் வகையில் 2022 மே மாதம் திறக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், தமிழ் இலக்கியங்களில் ஒன்றான ‘திருக்குறளை’ கெமர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதனை பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும், என்றும் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் கம்போடியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் சுமார் 25,000 தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்போடிய கலாச்சார மற்றும் நுண்கலை அமைச்சகத்தில் பணிபுரியும் மோர்ன் சோபீப் மற்றும் ப்ரோம் கெமாரா ஆகியோர் ஜூன் 30 அன்று முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்து காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் மற்றும் வைகுடநாதர் கோயில், தஞ்சையில் உள்ள பெரிய கோயில், சிதம்புரத்தில் உள்ள ஸ்ரீ நடராஜர் கோயில் மற்றும் மாமல்லபுரம் கோயிலுக்கு சென்று கெமர் வம்சத்திற்கும் பல்லவ வம்சத்திற்கும் இடையிலான வரலாற்று தொடர்புகள் கொண்ட பல ஆதாரங்களைக் சேகரித்தனர்.

நியூஸ் டுடேவிடம் செய்தியாளர்களிடம் பன்னாட்டு தமிழர் நடுவம் தலைவர் கா. திரு தனிகாசலம் கூறுகையில், ‘திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.25 கோடி , மேலும் சிலைகளை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடியையும் அழைக்க முடிவு செய்துள்ளோம்’ என்று கூறினார்.