நாடு முழுவதும் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க BSNL நிறுவனம் திட்டம்!!

நாடு முழுவதும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க BSNL நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பிரவீன்குமார் பர்வார் எகானமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், 80 ஆயிரம் பேருக்கு விருப்ப ஓய்வு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

விருப்ப ஓய்வு அளித்த பிறகும், ஒரு லட்சம் பேர் பணியில் இருப்பார்கள் என்றும், மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு சிறப்பான பணப் பலன்கள் வழங்கப்படும் என்றும் பிரவீன்குமார் தெரிவித்தார்.