234 பயணிகளுடன் ஏர் இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ விமானம் சிங்கப்பூரிலிருந்து டெல்லி புறப்பட்டது..!

COVID-19 தொற்றை கட்டுப்படுத்த அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளையும் கடந்த மார்ச் மாதம் இந்தியா ரத்து செய்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டும் பணியை இந்திய அரசு தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க : COVID -19: சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை இம்மாதம் 40,000 வரை உயரலாம்..!

இதில் முதல்கட்டமாக துபாயில் சிக்கி இருந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இரண்டு விமானங்களை இயக்கப்பட்டன. அவர்கள் வியாழக்கிழமையன்று கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம் வந்திறங்கினர்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, சிங்கப்பூரிலிருந்து சிறப்பு ஏர் இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ விமானம் 234 பயணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது.

அதாவது AI381 விமானம் இந்திய தலைநகர் டெல்லியில் இன்று காலை 11:35 மணிக்கு தரையிறங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 சூழல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு ‘வந்தே பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் வரும் வாரத்தில் மட்டும் 12 நாடுகளில் இருந்து 15,000 இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அவர்கள் சொந்த செலவில்தான் பயணச்சீட்டு பெற வேண்டும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் விமானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: COVID -19: முஸ்தபா மையம் ஒரு மாத கால மூடலுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது..!