பேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு இந்திய ராணுவம் தடை

89 செயலிகளுக்கு இந்திய ராணுவம் தடை
Imaged Courtesy: Indian Army

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவின் 59 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிப்பதாக இந்திய அரசு கூறி நடைமுறைக்கும் கொண்டு வந்தது.

இதனையடுத்து தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிண்டர், டிக்டாக், ஷார்இட் உட்பட 89 செயலிகளை இராணுவத்தினர் பயன்படுத்தத் தடை விதிப்பதாக இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள செயலிகளின் விபரம்:

இந்த செயலிகளைப் பயன்படுதுவதால் இந்திய இராணுவத்தின் தகவல்கள் வெளியில் கசிகின்றன. எனவே தங்கள் மொபைல் போனில் பட்டியலிடப்பட்டுள்ள 89 செயலிகள் இருந்தால், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று இராணுவம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தடையில் பப்ஜி, கிளாஷ் ஆப் கிங்ஸ், மொபைல் லெஜெண்ட்ஸ் உள்ளிட்ட கேம் செயலிகளும் அடங்கும் என்பதால் அந்த செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களை இச்செய்தி அதிர்ச்சியடையச் செய்துள்ளது.