கொரோனாவிற்கு பயந்து சென்னையை விட்டு வெளியேற 34 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் ஊரடங்கின்போது , வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள, தற்போது வரை 34 லட்சம் ‘இ-பாஸ்’ விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றுநோய்பரவுதலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசுகளும் போராடி வருகின்றன. ஊரடங்கு விதிமுறைகள் தளர்வுகளை ஒட்டி, வணிக நிறுவனங்கள், மக்களுக்காக பொது சேவைகள் துவங்கப்பட்டதால் அனைவரும் தங்களது பணிகளை மேற்கொள்ள துவங்கிவிட்டனர்.

ஊரடங்கு நேரங்களில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த இரு மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவைகள் இன்னும் துவக்கப்படவில்லை. தற்போது மாநிலங்களுக்குள் இருக்கும் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையில் மட்டுமே சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொற்று அதிகரித்து வரும் நேரம் என்பதால் திருமணம், இறப்பு , மருத்துவமனை மற்றும் உடல்சார்ந்த அல்லது தொழில் சார்ந்த வெளியூர் பயணங்களுக்கு ஆன்லைன் வழியாக அனுமதி பெறும், ‘இ – பாஸ்’ வசதி நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல், வெளியூர் பயணங்கள் செல்ல, பல லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:கொரோனோ ஊரடங்கின்போது, பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்ல, இதுவரை, 34 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், கல்யாணம், இறப்பு, மருத்துவமனைக்கு செல்லுதல் போன்ற காரணங்களுக்காக, 29 லட்சம் தனிநபர் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இது தவிர, தொழில் சம்பந்தமாக பயணம் மேற்கொள்ள, ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், 29 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 11 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.