திருச்சி கொரோனா சிகிச்சை மையம்: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 27 பேர் கண்காணிப்பு..!

தமிழகம்: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள COVID-19 சிறப்பு மையத்தில் 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் அருகே 12 கிமீ தொலைவில் உள்ள கள்ளிக்குடி என்னும் இடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், ரூ.77 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனி வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் சீட்டின் அடியில் தங்கம் கடத்தல்..!

இதை அடுத்து, அதனை மாற்றியமைத்து 75 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் நபர்களை கண்காணித்து நோய் தொற்று இல்லை என்றால் அனுப்பி வைக்கப்படுவர்.

இந்நிலையில் சிங்கப்பூர், ஷார்ஜா, துபாய் ஆகிய நகரங்களில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை வருகை தந்தவர்களில் 27 பேருக்கு சளி, இருமல் இருந்தததால் கள்ளிக்குடிக்கு கொண்டு வரப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை 24 மணி நேரத்துக்கு கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

Source : Tamil Medias

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி உட்பட 6 பேர் கோவை கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதி..!

corona virus. Corona virus tamil news, Corona virus news in tamil, corona virus tamil nadu news, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms