சென்னையில், சுமார் 2000 குழந்தைகள் ஜி ஜின்பிங் முகமூடி அணிந்தும், அவரது பெயரை அவர்களது உடலால் வடிவமைத்தும் அசத்தினர்..!!

சென்னையில், சுமார் 2000 குழந்தைகள் ஜி ஜின்பிங் முகமூடி மற்றும் அவர்களது உடலால் அவரது பெயரை வெளிப்படுத்தியும் வரவேற்றனர்.

சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் தமிழகத்தில் முறைசாரா சந்திப்பு நடத்தினர். இதில் சீன அதிபர் ஜி அவர்களுக்கு சென்னை கொளத்தூர் பகுதி பள்ளி மாணவர்களால் இதயம் கனிந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஜி ஜின்பிங் பெயரை தங்கள் உடலால் வடிவமைத்தும், மேலும் அவரின் உருவ முகமூடியை அணிந்து சுமார் 2000 மாணவர்கள் அசத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் வாழை இலைகள், பழங்கள் மற்றும் மாலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தோரணங்களால் ஜி ஜின்பிங் அவர்களை வரவேற்றனர் என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.