சுர்ஜித் செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோர்; பாத்ரூமில் தண்ணீர் கேனுக்குள் கவிழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

லிங்கேஷ்வரன் என்பவர் தனது மனைவியுடன் நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி பகுதியயை சேர்ந்த மீனவரான லிங்கேஷ்வரன் தனது மனைவியுடன் (நிஷா) நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தனது குழந்தை ரேவதி சஞ்சனா (வயது 2 ) காணாமல் போக பதறிப்போன அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். தொடர்ந்து தனது வீட்டின் கழிவறையை திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் கேனுக்குள் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஒரு குழந்தையை பறிகொடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கி இருக்கும் இந்த நேரத்தில், மேலும் ஒரு துயர சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.