COVID-19: சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட 100 விமான சேவைகள் ரத்து..!

முதன்முதலில் சீன நாட்டின் வூஹான் பகுதியில் துவங்கிய இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் உள்ளதன் காரணமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் உடுமலை வந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறி..!

அதே நேரத்தில், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கும், குறிப்பாக சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமானநிலையத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட 100 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 37 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலில் கீழே குறிப்பிடப்பட்ட சேவைகளும் அடங்கும்.

  • 9 இண்டிகோ விமானங்கள்
  • 5 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள்
  • 2 பாடிக் ஏர்லைன்ஸ் விமானங்கள்
  • 2 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள்
  • 3 லுப்தான்சா
  • 14 கேதே பசிபிக் ஏர்லைன்ஸ்

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த தஞ்சாவூர் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!

இந்த மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை 62 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • 6 குவைத் ஏர்லைன்ஸ் விமானங்கள்
  • 6 தாய் ஏர்லைன்ஸ் விமானங்கள்
  • 4 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்
  • 29 இண்டிகோ விமானங்கள்
  • 17 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Source : Tamil Medias

corona virus. Corona virus tamil news, Corona virus news in tamil, corona virus tamil nadu news, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms, flights