சிங்கப்பூரில் பணியாற்றிய, திருமணம் நிச்சயிக்கப்பட்ட தமிழக இளைஞர் விபத்தில் பலி..!

தமிழ்நாடு: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் பஞ்சனுாரை சேர்ந்த நீலகண்டன் என்பவருடைய மகன் மணிமாறன் (29), இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தவர்.

இதையும் படிங்க : சென்னையில் 506 விமான சேவைகள் முற்றிலும் ரத்து; சிங்கப்பூரிலிருந்து சரக்கு விமானம் இயக்கம்..!

இவருக்கு அடுத்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தன்னுடைய திருமணத்திற்காக கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து வந்த மணிமாறன், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியாங்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பாலத்தில் மோதியதில் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதை அடுத்து, ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு..!