இந்தியாவில் உருவாகிவரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 2020ல் திறப்பு..!

The world's largest cricket stadium in India can restart matches within 30 minutes of rain

குஜராத்தில், சர்தார் வல்லபாய் படேல் மைதானம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகி வருகிறது.

தற்போது வரை உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் ஆகும். இதை முறியடிக்க 2015ல் குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்ததையடுத்து, ஆமதாபாத் நகரின் மொடிரா பகுதியில் 1982ல் உருவாக்கப்பட்ட மைதானத்தை பிரமாண்டமாக மாற்ற, கடந்த 2015ல் இடிக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

மேலும், உலகத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையையும் இந்த மைதானம் பெறவுள்ளது.

இந்த மைதானத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் :

  • இந்த மைதானத்தில் 1 லட்சத்து பத்தாயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை காணலாம்.
  • மொத்தம் 11 ஆடுகளங்கள்.
  • உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த லார்சன் அன்ட் டர்போ நிறுவனம் தான் மைதானத்தின் வடிவம், கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது.
  • மொத்தம் 63 ஏக்கர் கொண்ட இதன் திட்ட மதிப்பு ரூ. 700 கோடி ஆகும்.
  • 3 ஆயிரம் கார், 10 ஆயிரம் இரு சக்கர வாகனம் நிறுத்தும் வசதியுடையது.
  • ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தப்படும் நீச்சல் குளம் மற்றும் 50 அறைகள், 4 உடை மாற்றும் ரூம்கள்.
  • மழையால் ரசிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிறந்த மேற்கூரை மற்றும் சூரியஔி மின்சார தகடுகள் பொருத்தப்படும்.
  • மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக அமைக்கப்பட உள்ளது. போட்டி பாதிக்கப்பட்டால், வெறும் 30 நிமிடங்களில் மீண்டும் ஆட்டத்தை துவக்கலாம்.
  • எவ்வித தூணும் இல்லாமல், விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
  • இந்தியாவில் தற்போதுள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனை இந்த மைதானம் பின்னடைய செய்யும். இந்த மைதானத்தில் 63 ஆயிரம் பேர் அமரலாம்.