நான் பங்கேற்க்கும் நிகழ்ச்சிகளில் இனி பேனர் வைக்கக் கூடாது; மு.க.ஸ்டாலின் அறிக்கை !!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலைகளில் பேனர்கள் வைப்பதை அறவே நிறுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். மேலும், பேனர் வைத்தால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமது இந்த அறிவுரையை கடைப்பிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் கீழே விழுந்ததால் இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து, அரசியல் தலைவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் இனி பேனர் வைக்கக் கூடாது, என்று அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளன.