வாட்ஸ்அப் தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இப்போது ஒரு குழுவில் 8 பேரை குரல் அல்லது வீடியோ அழைப்பு மூலம் இணைக்க முடியும் என்பதே அந்த அம்சம்.
இதற்க்கு முன்பு 4 பேருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். அதனை தற்போது 8 பேராக உயர்த்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். குழு அழைப்புகளுக்கு அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்கும் அம்சத்துடன் வாட்ஸ்அப், கூகிள் மீட் மற்றும் ஜூம் கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க விரும்புகிறது.
கட்டம் வாரியாக வெவ்வேறு சாதனங்களுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தை வெளியிடுகிறது. பீட்டா பதிப்பிற்காக இந்த அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. லேட்டஸ்ட் வெர்சனில் கிடைக்கும் இந்த அம்சம்.
இந்த அம்சத்தை Android பீட்டா பதிப்பு 2.20.132 மற்றும் iOS பீட்டா பதிப்பு 2.20.50.25 இல் அனுபவிக்க முடியும். iOS பயனர்கள் இந்த பீட்டா பதிப்பை TestFlight இல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.