வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பலாம்.!

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒசிஐ, பிஐஓ அட்டைதாரர்கள் மற்றும் பிற வெளிநாட்டினர்கள் எந்தக் காரணத்திற்காகவும் இந்தியா சென்றுவர அனுமதிக்கும் விதமாக இந்திய அரசு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

இருப்பினும், சுற்றுலா விசாக்களில் இந்தியா செல்லத் தடை இன்னும் நீடிக்கிறது. இந்தியாவிற்கு வருகைதர அல்லது இந்தியாவிலிருந்து புறப்பட விரும்பும் வெளிநாட்டினர்கள் மற்றும் இந்தியர்களுக்கான விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: சாங்கி விமான நிலையம் அருகே பணிப்பெண்ணை தாக்கிய கோல்ஃப் பந்து..!

சுற்றுலா தவிர பிற காரணங்களுக்காக ஒசிஐ, பிஐஓ அட்டை வைத்திருப்பவர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர், தங்களுடன் வருவோருக்கும் சேர்த்து மருத்துவ விசா கோரி விண்ணப்பிக்கலாம் என்றும்,
தொழில், கருத்தரங்குகள், வேலை, கல்வி ஆய்வு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டினர் இந்தியா வந்து செல்ல முடியும் என்றும் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லிட்டில் இந்தியாவில் ஆயுதத்தை கொண்டு முதுகில் தாக்கிய சந்தேகத்தில் இளைஞர் கைது..!

மின்னணு, சுற்றுலா, மருத்துவ விசாக்கள் தவிர மற்ற அனைத்து விசாக்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அவை செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய விசாக்கள் காலாவதியாகிவிட்டால், இந்திய தூதரகங்களிலிருந்து புதிய
விசாக்களைப் பெற்றுக்கொள்ளலாம்‌ என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தல், வேறு சுகாதார, COVID-19 தொடர்பான இந்திய சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் வெளியிட்டுள்ள
வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நான்கு பெண்களின் சண்டை….மூன்று பேர் கைது..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…