கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து காப்பகத்தில் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி…!

Virat Kohli turns Santa Claus to surprise kids in shelter home

இந்தியா: கொல்கத்தாவில் உள்ள காப்பகம் ஒன்றுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று இந்திய அணி தலைவர் விராட் கோலி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய்பரவி வருகிறது.

கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதையொட்டி கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு, கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து விராட் கோலி சென்றுள்ளார்.

குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்துவிட்டு தனது முகத்தில் ஒட்டியிருந்த தாடியை கோலி அகற்றிய உடன் கோலியை அடையாளம் கண்ட குழந்தைகள் ஓடிவந்து அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த காணொளியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.