இந்தியாவின் தேசிய கீதத்தை பாடி அசத்திய துபாய் போலீஸ் – இந்தியர்கள் பெருமிதம்..!!

துபாயில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துபாய் அரசாங்கம் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்காக தீபாவளி பண்டிகையை கொண்டாடியது.

இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த விழாவில் துபாய் போலீசார் சார்பில் இந்திய தேசிய கீதம் பேண்ட் வாத்தியமாக வாசிக்கப்பட்டது. இது பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்த நிகழ்வு துபாய் வாழ் தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.