சிங்கப்பூரில் இருந்து இந்தியா புறப்படும் விமானங்களில் முதன்மை பட்டியலில் தமிழகம் இல்லை – அடுத்து எப்போது..!

COVID-19 தொற்றை கட்டுப்படுத்த அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளையும் கடந்த மார்ச் மாதம் இந்தியா ரத்து செய்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டும் பணியை இந்திய அரசு தொடங்கி உள்ளது. COVID-19 சூழல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு ‘வந்தே பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சிங்கப்பூரிலிருந்து சிறப்பு ஏர் இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ AI381 விமானம் 234 பயணிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு சென்றது.

அதே போல இரண்டவதாக, சிங்கப்பூரிலிருந்து AI343 விமானம் மும்பைக்கு 243 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நேற்று புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், விமான பட்டியலில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சிங்கப்பூருக்கான இந்திய தூதரக சமூக வலைதள கணக்குகளிலும் தங்களுடைய கேள்விகளையும் பலர் எழுப்பி வருகின்றனர்.

விமான பட்டியல்

  • 08 May 20 –  AI 381   – Delhi
  • 10 May 20  – AI 1343 – Mumbai
  • 12 May 20  – AI 381   – Delhi
  • 13 May 20  – AI 1377 – Bengaluru

சிங்கப்பூருக்குக்கான இந்திய தூதரகம் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, விரைவில் சேவைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது தமிழகத்திற்கான விமான சேவை அறிவிக்கப்படும் என்று தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.