தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04/07/2022) முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையான ‘ஃபெட்னா’ அமைப்பின் 35- வது ஆண்டு விழாவில் கலந்துக் கொண்டு பேருரையாற்றினார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ‘Cabin crew’ பணி…. இன்டர்வியூவில் பங்கேற்க பெண்களுக்கு அழைப்பு!
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 70- க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் ஒட்டுமொத்தமான அமைப்பான, வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையான ஃபெட்னா அமைப்பைச் சார்ந்த அதன் அமைப்பாளர் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் அமைப்பாக, தமிழின அமைப்பாக நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள். கூடிக் கலையும் அமைப்பாக இல்லாமல், கூடிச் செயல்படும் அமைப்பாக இருக்கிறீர்கள். கொரோனா காலத்தில் நீங்கள் செய்த உதவிகளை தமிழ்நாடு மறக்கவில்லை. ஏன் நானும் மறக்கவில்லை. அப்போதே, இதன் அமைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தி நான் காணொளியில் பேசியிருக்கிறேன். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து வருகிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்காக, வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் 2011- ஆம் ஆண்டு மார்ச் 1- ஆம் தேதி அன்று கழக அரசால் இயற்றப்பட்டது. இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ‘Cabin crew’ பணி…. இன்டர்வியூவில் பங்கேற்க பெண்களுக்கு அழைப்பு!
சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவ, சகோதரத்துவம், மானுடப்பற்று, தமிழ் மொழிப்பற்று, இன உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சித் தத்துவங்களைக் கொண்ட திராவிட மாடல் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டியிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில், வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் தலைவர் கால்டுவெல் வேலுநம்பி, ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன் புருஷோத்தமன் மற்றும் பால சுவாமிநாதன், நியூயார்க் தமிழ் சங்கத் தலைவர் ராம்மோகன், சங்க நிர்வாகிகள் மற்றும் வட அமெரிக்க வாழ் தமிழர்கள் கலந்துக் கொண்டனர்.