இன்றைய காலத்திற்கு ஏற்ற “UNLOCK” குறும்படம் – ஒரு பார்வை !

“UNLOCK” என்ற குறும்படம் இன்றைய சூழலில் தொலைபேசியின் பயன்பாடும் அதனால் மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளையும் அழகாக சொல்லும் ஒரு படைப்பு ஆகும்.

‘தொலைபேசி இல்லை என்றால் மனிதன் இல்லை’ என்ற அளவிற்கு தொலைபேசி நம்மோடு வாழ்ந்து வருகிறது என்றே கூறலாம். தொலைபேசியின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் போது மனிதன் தரம் சற்று கீழே சென்று கொண்டு இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

இந்த Unlock குறும்படம் இதையே அழகான வடிவில் எடுத்து காட்டுகிறது. தொலைபேசிக்கு அடிமையான ஒரு இளைஞன், தான் வாழும் சமூகத்தில் எந்த ஒரு பங்களிப்பும், அக்கறையும் இல்லாமல் தனித்து வாழ்கிறான்.

ஒரு முறை தன் தொலைபேசி டாய்லெட்டில் விழும்போது, அதை எடுக்க முயற்சி செய்கையில் இளைஞனின் கை மாட்டிக்கொள்கிறது. நீண்ட முயற்சிக்குப்பின் தன்னால் கையை எடுக்க முடியவில்லை, என்று உணர்ந்த பின்னர் பிறர் உதவியை நாடுகிறான். பிறகு தான் செய்த தவறுகளை நினைத்து பார்கிறான். இறுதியில் அவன் எவ்வாறு தப்பித்தான், தன்னை திருத்திக் கொள்கின்றானா? இல்லையா? என்பது தான் கதையின் இறுதி முடிவாக இருக்கும்.