இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – வைரஸ் பரவியது எப்படி?

corona virus, covid 19, india

டெல்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (பிஐபி) உறுதி செய்துள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கண்டுபிடிக்கப்பட்ட நபர் இத்தாலியில் இருந்து பயணம் செய்து வந்தவர். தெலங்கானாவில் நோய் உறுதி செய்யப்பட்டவர் துபாயில் இருந்து பயணம் செய்து வந்துள்ளார். இவரது பயண விவரங்கள் மேற்கொண்டு ஆராயப்படுகின்றன.

கொரோனா வைரஸ் – ஆஸ்திரேலியாவில் முதல் பலி

இரு நோயாளிகளும் உறுதியான நிலையில் உள்ளனர். இவர்களின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று பிஐபி செய்திக் குறிப்பு உறுதி செய்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்கிறது.

வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எந்த இடத்தில் இருந்து தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, விமான பயணத்தின் இடையே வேறு எந்த நாட்டிலாவது விமானம் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து தொற்று ஏற்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

இதுபற்றி ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகுசர்மா கூறும்பொழுது, கடந்த 29ந்தேதி ஜெய்ப்பூர் வந்திறங்கிய பயணியிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முதலில் பாதிப்பு இல்லை என தெரிந்தது.

https://in.tamilmicset.com/india-news/new-tempo-travel-from-chennai-airport-to-carry-passengers/

2வது முறையாக நடந்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில், “21 விமான நிலையங்கள், 12 பெரிய துறைமுகங்கள், 65 சிறிய துறைமுகங்கள் ஆகிய இடங்களில் பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 5,57,431 பயணிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.