சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் உட்பட இருவர் பலி..!

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25) அதிகாலை, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

சனிக்கிழமை காலை 6 மணியளவில் காவல்துறைக்கு இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் ஏப்ரல் 30 அன்று மே தின உரை ஆற்றவுள்ளார்; மே தின கூட்டம் நடைபெறாது..!

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற மலேசியாவைச் சேர்ந்த ஆடவர் (27), மற்றும் இந்தியாவைச் சேர்ந்த திரு சுல்தான் அப்துல் காதர் ரஹ்மான் கரீம் (33) ஆகிய இருவரும் Hougang அவென்யூ 3 மற்றும் ஏர்போர்ட் ரோடு சந்திப்பில் விபத்துக்குள்ளானார்கள்.

இருவரும் மயக்கமடைந்து சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருவரும் அவர்கள் பணிபுரிந்த காக்கி புக்கிட் அருகே roti prata உணவகத்திற்கு சென்று கொண்டிருந்தனர் என்று திரு சுல்தானின் உறவினர் திரு கலந்தர் மராய்காயர் முகமது ரியாஸ், 36 குறிப்பிட்டுள்ளார்.

திரு சுல்தான் அப்துல் காதர் ரஹ்மான் கரீம், தமிழ்நாடு, கொட்டைப்பட்டினம் கிராமத்தில் சேர்ந்தவர். இவரின் சம்பாத்தியத்தில் குடும்பம் வாழ்த்துவந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இறப்பதற்கு முன்னர், திரு சுல்தான் சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி (22) மற்றும் இரண்டு வயது மகள் மற்றும் பெற்றோர்களும் உள்ளனர்.

திரு சுல்தானின் நண்பர்களும் குடும்பத்தினரும் தற்போது அவரது இறுதிச் சடங்கிற்காக நிதி திரட்டவும் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும் முயற்சிக்கின்றனர் என்று திரு கலந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் மிகவும் ஏழ்மையானவர் என்பதால் நிதி திரட்டுவதற்கான வழிகளை நாங்கள் தேடுகிறோம்” என்று திரு கலந்தர் கூறினார்.

இதனை தொடர்ந்து, செடான் காரின் 39 வயதான ஆண் ஓட்டுநர் ஆபத்தான வாகனம் ஓட்டியதால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

நன்கொடை அளிக்க விரும்புவோர் திரு கலந்தரை 8509 0786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க : COVID-19: 4 புதிய குழுமங்கள் அடையாளம்; தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 886 பேர் பாதிப்பு..!