ஷேர்சாட்டில் மிகப்பெரிய முதலீடு செய்த ட்விட்டர்!

இந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் மிகப்பெரிய அளவு முதலீடு செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.

அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வரும் App ஷேர்சாட் என்றே கூறலாம், அந்த அளவிற்கு இந்த App இன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வாட்ஸ் அப் தேவையான ஸ்டேட்டஸ் மற்றும் DP, வால்பேப்பர், பேஸ்புக், Instagram, Twitter போஸ்ட்களுக்கு தேவையான சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர்சாட்டில் இருந்தே எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஷேர் சாட் App -ஐ கான்பூரில் படித்த Ankush Sachdeva, Farid Ahsan and Bhanu Singh என்ற மூன்று இளைஞர்களால் 2015 அக்டோபரில் தொடங்கப்பட்டது.

இன்று இந்தியாவின் மிகப்பெரிய சமூக வலைதளமான மாறி வருகிறது. அந்த அளவிற்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்கமொழி உள்ளிட்ட 15 பிராந்திய மொழிகளில் ஷேர்சாட் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு 50 மில்லியன், அதாவது 5 கோடி பயனாளர்கள் பயன்பாட்டில் இருக்கிறார்கள். இதில், தமிழில் மட்டும் 70 லட்சம் பேர். இத்தனை மொழிகளில் இருந்தாலும் கூட ஆங்கிலத்தில் ஷேர்சாட் இல்லை. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் முன்னோடியாக விளங்கும் அமெரிக்காவின் மைக்ரோ பிளாக்கிங் சைட்டான Twitter நிறுவனம், சுமார் 100 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 700 கோடி ரூபாய்) இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான ஷேர்சேட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் ட்விட்டர் முதல் முறையாக முதலீடு செஞ்சிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ட்விட்டர் மட்டுமல்லாமல் TrustBridge Partners, Shunwei Capital, Lightspeed Venture Partners, SAIF Capital, India Quotient, and Morningside Venture Capital உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

இந்த முதலீடை வைத்து தொழில்நுட்ப கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியமர்த்தப்போறதாக ஷேர்சாட் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டில், கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2021 ஆண்டில் இந்தியாவில் non-english internet users-ன் எண்ணிக்கை 536 மில்லியனாக இருக்கும் என்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.