திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக சிங்கப்பூருக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது ஏர் ஏசியா நிறுவனம்!

Photo: AirAsia

ஏர் ஏசியா விமான நிறுவனம் (Air Asia) குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவையைப் படிப்படியாகத் தொடங்கி வருகிறது. அதன்படி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது.

திருச்சி, குவைத் இடையே மீண்டும் நேரடி விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

அந்த வகையில், திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ஏர் ஏசியா தனது விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஏப்ரல் மாதத்தின் வாரத்தில் செவ்வாய்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் ஒரு நாளைக்கு தலா நான்கு விமான சேவையை இரு மார்க்கத்திலும் ஏர் ஏசியா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விமான சேவையானது மே மாதத்தில் தினசரி விமான சேவையாக அந்நிறுவனம் வழங்க உள்ளது. ஒரு நாளைக்கு ஆறு விமான சேவையை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இந்த விமானச் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

“இந்தியாவில் இருந்து தாய்லாந்து, மலேசியாவிற்கு மீண்டும் விமான சேவை”- ஏர் ஏசியா அறிவிப்பு!

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு என்ற https://www.airasia.co.in/home இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.