திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) எந்தெந்த நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். திருச்சியில் இருந்து சிங்கப்பூர் மற்றும் துபாய், ஷார்ஜாவுக்கு தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். அதேபோல், வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திருச்சியில் இருந்து தோஹாவுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
‘திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக ஹனோய்க்கு விமான சேவை’- ஏர் ஏசியா நிறுவனம் அறிவிப்பு!
திருச்சியில் இருந்து மஸ்கட்டிற்கு வாரத்தில் வியாழக்கிழமைகளிலும், திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், திருச்சியில் இருந்து குவைத்துக்கு வாரத்தில் செவ்வாய்க்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளிலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது புதிய ஓடுபாதை!
இது குறித்த கூடுதல் விவரங்கள், விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணைக்கு உள்ளிட்டவற்றுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
