திருச்சி, கோலாலம்பூர் இடையே விமான சேவை- டிக்கெட் முன்பதிவைத் தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Wikipedia

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் IX 624 என்ற விமானமும், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் திங்கள்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் IX 623 என்ற விமானமும் இயக்கப்படும்.

வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் அக்டோபர் 29- ஆம் தேதி வரை இந்த அட்டவணையில் விமானங்கள் இயக்கப்படும். இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதே வழித்தடத்தில் ஏர் ஏசியா (Air Asia) உள்ளிட்ட விமான நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து மலேசியா நாட்டின் கோலாலம்பூருக்கு தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.