திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்துக்கு ‘Al Maktoum Dubai’ (Dubai World Central- ‘DWC’) இரு மார்க்கத்திலும் நேரடி தினசரி விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
“கோவையில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூருவுக்கு விமான சேவை”- விஸ்தாரா நிறுவனம் அறிவிப்பு!
இது தொடர்பாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மே 10- ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 22- ஆம் தேதி வரை திருச்சி மற்றும் துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்துக்கு இரு மார்க்கத்திலும் நேரடி தினசரி விமான சேவை வழங்கப்படும். அதன்படி, IX 611 என்ற விமானம் திருச்சியில் இருந்து நள்ளிரவு 12.30 AM மணிக்கு புறப்பட்டு, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 03.00 AM மணிக்கு சென்றடையும்.
அதேபோல், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 05.00 PM மணிக்கு புறப்படும் IX 612 என்ற விமானம், இரவு 10.40 PM மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூன் மற்றும் மே மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘சென்னை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#FlyWithIX : Our flights connecting Trichy & Dubai will be operating to & from Al Maktoum Dubai (DWC) Airport instead of Dubai Airport (DXB) due to Northern Runway Closure.
Trichy 🔁 Al Maktoum Dubai (DWC) flight schedule of 𝑴𝒂𝒚 & 𝑱𝒖𝒏𝒆 2022! pic.twitter.com/jbVrdOpWbu
— Air India Express (@FlyWithIX) May 6, 2022