இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு சென்னையில் இருந்து பிப்.27 முதல் தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் (ALLIANCE AIR) அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு – ‘ரசம் சாப்பிடுங்கள்’ என்று போஸ்டர் வைத்து ஐடியா கொடுக்கும் சீனா
வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த விமான போக்குவரத்து சேவை இயங்கும். தினம் காலை 1045hrs மணிக்கு பிளைட் 9I 101 சென்னையில் இருந்து கிளம்பி, 1200hrs மணிக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் சென்றடையும்.
திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிளைட் 9I 102 யாழ்ப்பாணாவில் 1245hrs மணிக்கு கிளம்பி, சென்னைக்கு 1410hrs மணிக்கு வந்து சேரும்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், பிளைட் 9I 102 யாழ்ப்பாணாவில் 1245hrs மணிக்கு கிளம்பி, சென்னைக்கு 1355hrs மணிக்கு வந்து சேரும்.
சென்னை – யாழ்ப்பாணம் விமான கட்டணம் ரூ.INR 3,190ல் இருந்து தொடங்குகிறது (வரி சேர்க்கப்படாமல்)
யாழ்ப்பாணம் – சென்னை விமான கட்டணம் ரூ.INR 3,990ல் இருந்து தொடங்குகிறது (வரி சேர்க்கப்படாமல்).
திருச்சியில் இருந்து அபுதாபிக்கு எந்தெந்த கிழமைகளில் விமான சேவை தெரியுமா?