ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகின்றது என்றே கூறலாம்.
அந்த வகையில், இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்குகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, இந்தியாவின் திருச்சி, திருவனந்தபுரம், கொச்சி, டெல்லி, ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், மும்பை, மங்களூரு கோழிக்கோடு, லக்னோ ஆகிய 10 நகரங்களில் இருந்து துபாய்க்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்திய நகரங்களில் இருந்து துபாய் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், அருகில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.