திருச்சியில் இருந்து மஸ்கட்டிற்கு வாரத்தில் வியாழன்கிழமைகளிலும், மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். திருச்சியில் இருந்து மஸ்கட்டிற்கு IX 619 என்ற விமானமும், மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கு IX 620 என்ற விமானமும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ‘ஏர்பஸ் பெலுகா’ விமானம்!
இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், வரும் நாட்களில் திருச்சி மற்றும் மஸ்கட் இடையேயான விமான சேவைகளின் எண்ணிக்கையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.