திருச்சி மற்றும் மணிலா இடையே தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் ஏசியா நிறுவனம் (AirAsia). அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக மணிலாவுக்கும், மணிலாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக திருச்சிக்கும் என இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் ஏசியா நிறுவனம். இவை தினசரி விமான சேவை ஆகும். ஆனால் நேரடி விமான சேவை கிடையாது. இந்த வழித்தடத்தில் தினசரி நான்கு விமான சேவைகளை ஏர் ஏசியா நிறுவனம் வழங்கி வருகிறது. வாரத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஐந்து விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் என்பதும், அந்த நாட்டின் சுற்றுலா தலங்களில் இந்த நகரமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.